

சுஜித் இயக்கத்தில் பிரபாஸுடன் இணைந்து ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்த படம் சாஹோ, இந்தப் படம் வெளியாவதால் திரையரங்குகளில் பிரபாஸ் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் என்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தனர்.
இந்நிலையில் தெலங்கானாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பிரபாஸ் ரசிகர் ஒருவர் பேனர் கட்டிய போது மின்சார ஒயர் உரசியதால் மின்சாரம் பாய்ந்ததில் தியேட்டர் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தச் சம்பவத்தை அடுத்து தியேட்டர் நிர்வாகிகள் போலீசில் புகார் அளிக்க போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பிரேதப்பரிசோதனைக்கு அந்த நபரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அவர் பற்றிய விவரங்கள் இல்லை.