

'பாகுபலி 3' சாத்தியப்படுமா என்று நடிகர் பிரபாஸ் பதிலளித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நாயகர்களில் ஒருவரான பிரபாஸ், 'பாகுபலி' படத்துக்குப் பின் தேசிய அளவில் பிரபலமானார். 'பாகுபலி 2'-வின் இமாலய வெற்றியும், வசூல் சாதனையும் இன்னும் அவரை பலமடங்கு பிரபலமாக்கியது.
தற்போது 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 'சாஹோ' நடித்துள்ளார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் படம் வெளியாகிறது. வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.
'சாஹோ' படத்தின் விளம்பரத்துக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார் பிரபாஸ். அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் பாகுபலி 3 சாத்தியமா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பிரபாஸ், "ராஜமௌலி 3-வது பாகம் எடுக்க நினைத்தால் அதற்கு அவர் ஆர்வத்துடன் செயல்படுவார். அவர் என்னிடம் இதுவரை 6 கதைகளைத் தான் கூறியுள்ளார். அப்படியென்றால் அவரிடம் 10-14 கதைகள் இருக்கும். அப்படிப் பார்த்தால் 60% நாங்கள் பயன்படுத்திவிட்டோம்.
ஐந்து வருடங்களாக ஒரு கதையை மனதில் வைத்திருந்தார் என்பது தெரியும். ஆனால் பாகுபலி 3, சாத்தியமா, இல்லையா? என்று தெரியாது. அமரேந்திர பாகுபலி, மஹேந்திர பாகுபலி கதாபாத்திரங்களை என் உடலிலிருந்து பிரிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்