'மகதீரா' வெளியாகி 10 ஆண்டுகள்: காஜல் நெகிழ்ச்சி

'மகதீரா' படத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் | கோப்புப் படம்
'மகதீரா' படத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் | கோப்புப் படம்
Updated on
1 min read

'மகதீரா' வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி, படம் தொடர்பான தன் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் காஜல் அகர்வால்

ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், காஜல் அகர்வால், தேவ் கில், ஸ்ரீஹரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'மகதீரா'. ஜூலை 30, 2009-ல் இந்தப் படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் படம் வரவேற்பைப் பெற்றது. பெங்காலியில் இந்தப் படம் 'யோதா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தி ரீமேக் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இன்றுவரை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், 'மகதீரா' படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி படக்குழுவினர் பலரும் தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்த காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதற்குள் 'மகதீரா' வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படத்தில் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் செறிவூட்டுவதாக இருந்தது.

எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கமாக இருந்து வருவதற்கு நன்றி ராஜமௌலி சார். உங்களிடமிருந்து கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் தொழில் நெறிமுறைகளை மனதாரக் கடைபிடிக்கிறேன். ராம்சரண், நமது குழந்தைப் பருவத்தில் ஒரு பகுதியை நாம் பகிர்ந்து கொண்டது போல இருக்கிறது. அற்புதமான தருணங்களை நினைவுகூர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in