பாஹுபலி அப்டேட்ஸ்: மே 31-ல் ட்ரெய்லர், ஜூலையில் ரிலீஸ்

பாஹுபலி அப்டேட்ஸ்: மே 31-ல் ட்ரெய்லர், ஜூலையில் ரிலீஸ்
Updated on
1 min read

மே 31ம் தேதி 'பாஹுபலி' ட்ரெய்லர் வெளியிடவும், ஜூலையில் படத்தை வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்து வரும் 'பாஹுபலி' படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ராஜமெளலி. கீரவாணி இசையமைத்து வரும் இப்படத்தை அர்கா மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

தெலுங்கு திரையுலகில் தயாரான படங்களுள் அதிக பொருட்செலவில் தயாராகி வரும் படம் 'பாஹுபலி' என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மே மாதம் வெளியாகவிருந்த இப்படம், கிராபிக்ஸ் காட்சிகள் முடியாத காரணத்தால் எப்போது வெளியீடு என்பதை அறிவிக்காமல் இருந்தார்கள்.

இந்நிலையில், "17 நிறுவனங்கள், 600 கலைஞர்கள் 'பாஹுபலி' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக, இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்கின்றனர். ஆனாலும் நேரத்துக்கு முடிக்க இயலவில்லை.

'பாஹுபலி' படம் முதலில் மே 15-ஆம் தேதி படத்தின் முதல் பாகம் வெளியாகும் என அறிவித்திருந்தோம். இந்த தாமதத்தால் அது முடியாது. எனவே படத்தின் ட்ரெய்லர் மே 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ட்ரெய்லர் வெளியாகும் வரை, படத்தின் முக்கியப் பாத்திரங்களின் போஸ்டர்கள், மே 1-ஆம் தேதி முதல் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்படும்." என்று இயக்குநர் ராஜமெளலி அறிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in