பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் சூர்ய நாராயணா காலமானார்

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் சூர்ய நாராயணா காலமானார்

Published on

பிரபல தெலுங்கு காமெடி நடிகர் மைலவரபூ சூர்ய நாராயணா காலமானார். அவருக்கு வயது 63.

உடல்நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாராயணா சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார்.

தனது சொந்த கிராமத்துக்குச் சென்றிருந்தபோது நாராயணாவின் உடல்நிலை பாதிப்படைந்தது. ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

எம்.எஸ்.நாராயணா என அறியப்பட்ட இவர், சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் 1951-ஆம் ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்த நாராயணா ஆசிரியராக இருந்தவர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in