பும்ராவுடன் காதலா? - அனுபமா பரமேஸ்வரன் விளக்கம்

பும்ராவுடன் காதலா? - அனுபமா பரமேஸ்வரன் விளக்கம்
Updated on
1 min read

நடிகை அனுபமா பரமேஸ்வரன், கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் தனக்கும் இருப்பது நட்பு மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளை காதலிப்பதும், திருமணம் செய்துகொள்வதும் புதிதல்ல. கிசுகிசுக்கள் வருவதும் வழக்கமே. அப்படி, நடிகை அனுபமா பரமேஸ்வரனும், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் காதலிப்பதாக கடந்த சில வாரங்களாகவே நெட்டிசன்கள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில்ன் பின் தொடர்வதும், ஒருவர் பதிவுக்கு மற்றொருவர் பதில் சொல்வதையும் வைத்தே ரசிகர்கள் ஒரு காதல் கதையை எழுதிவிட்டனர். அனுபமாவிடம் இது பற்றி கேட்டபோது அதை மொத்தமாக மறுத்துள்ளார்.

தாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும், காதல் என்று வரும் செய்திகள் அனைத்தும் புரளிகள் மட்டுமே என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது போன்ற கிசுகிசுக்கள் சகஜம் தான் என்றும் அனுபமா குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பும்ராவும், நடிகை ராஷி கண்ணாவும் காதலிப்பதாக வந்த செய்திகளுக்கு ராஷிகண்ணா மறுப்பு தெரிவித்தார். பெண்களைப் பற்றிய இது போன்ற விஷயங்களை ஆதாரமில்லாமல் பகிரக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in