ப்ரியா வாரியரின் அடுத்த முடிவு: பாடகியாக அறிமுகமானார்

ப்ரியா வாரியரின் அடுத்த முடிவு: பாடகியாக அறிமுகமானார்
Updated on
1 min read

நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் ஃபைனல்ஸ் என்ற மலையாளப் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்

’ஒரு அடார் லவ்’ என்ற திரைப்படத்தில், மாணிக்ய மலராய என்ற பாடலில் தோன்றியவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்தப் பாடலில் இவர் ஒற்றைக் கண்ணை அடிக்கும் காட்சி யூடியூப் தளத்தில் வைரலாகி ஒரே நாளில் தேசிய அளவில் பிரபலமானார். பிபிசி ப்ரியாவை பேட்டி கண்டது.

’அடார் லவ்’ வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. படம் வெளியீட்டின் போதும், படத்தின் கதையை ப்ரியாவுக்கு ஏற்றவாரு தயாரிப்பாளர் மாற்றச் சொல்லி நிர்பந்தித்தார் என்று இயக்குநர் புகார் தெரிவிக்க, பெரும் சர்ச்சை வெடித்தது.

தொடர்ந்து ப்ரியா பாலிவுட்டில் ’ஸ்ரீதேவி பங்களா’ என்ற படத்தில் நடித்து முடித்தார். அந்தப் படத்தின் ட்ரெய்லரில், அது மறைந்த நடிகை ஸ்ரீதேவியைக் குறிப்பது போல இருந்ததால், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அடுத்தடுத்த சர்ச்சைகளைத் தொடர்ந்து தற்போது ப்ரியா வாரியர்,  ’ஃபைனல்ஸ்’ என்கிற மலையாளப் படத்தில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். ’நீ மழவில்லு போலென்’ என்ற பாடலை நரேஷ் ஐயருடன் பாடியுள்ளார் வாரியர். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் அருண் என்கிற அறிமுக இயக்குநரின் படம்.

இந்தப் பாடல் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இரண்டு வாரங்களில் 9 லட்சம் பார்வைகளை ஈர்த்துள்ளது.

அப்பாடலைக் காண:

priya prakash 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in