அனுஷ்காவுடன் காதலா? - பிரபாஸ் மறுப்பு

அனுஷ்காவுடன் காதலா? - பிரபாஸ் மறுப்பு
Updated on
1 min read

‘நடிகை அனுஷ்காவுடன் காதல் என்ற தகவல் வெறும் வதந்தி. அதில் உண்மை இல்லை. தற் போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை’ என்று நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்.

பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகர் பிரபாஸ், ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு, வெளிநாடுகளிலும் பிரபலமாகி விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிவரும் ‘சாஹோ’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இதற்கிடையில், இவரது திருமணம் குறித்து பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. நடிகை அனுஷ்காவுடன் காதல் என்றும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அவர்கள் இருவரும் இத்தகவல்களை மறுக்காததால், ஒருவேளை உண்மையாக இருக்கு மோ என்ற சந்தேகமும் இருந்தது.

இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித் துள்ள பிரபாஸ், தனது திருமணம் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இதனால் எனது ரசிகைகள் மகிழ்ச்சி அடைவார்கள் என நினைக்கிறேன். திருமணம் குறித்து நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் ஊடகங்கள் என்னையும், ஒரு நடிகையையும் (அனுஷ்கா) இணைத்து செய்திகளை வெளி யிட்டு வருகின்றன. இதில் உண்மை இல்லை. முதலில் இதுபோன்ற செய்திகள் வந்தால் மனம் வருந்துவேன். இப்போது பழகிவிட் டது. 2 படங்களில் தொடர்ந்து இணைந்து நடித்ததால், மக்களும், ஊடகங்களும் தவறாக புரிந்து கொள்கின்றன. தற்போது நடித்து வரும் ‘சாஹோ’ படத்தில்தான் என் முழு கவனமும் இருக்கிறது.

இவ்வாறு பிரபாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in