சிரஞ்சீவியின் 151-வது படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி

சிரஞ்சீவியின் 151-வது படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி
Updated on
1 min read

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 151-வது படமான 'சை ரா - நரசிம்ஹா ரெட்டி' படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது. மேலும் படக்குழு பற்றிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த நரசிம்ஹா ரெட்டி என்பவரின் வாழ்க்கை வரலாறை முதல்முறையாக திரைக்கு கொண்டு வரும் படம் சை ரா. இந்தப் படத்தை, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா தயாரிக்க, சிரஞ்சீவி நரசிம்ஹா ரெட்டியாக நடிக்கிறார்.

சிரஞ்சீவியின் பிறந்தநாளான இன்று (ஆகஸ்டு 22), படத்தின் முதல் பார்வை மற்றும் படக்குழு பற்றிய விபரம் வெளியிடப்பட்டது. இதில் சிரஞ்சீவியோடு, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, ஜகபதிபாபு உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு, ராஜீவன் கலை என மிகப் பிரம்மாண்டமாக இத்திரைப்படம் உருவாகிறது. சுரேந்தர் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார்.

அதனொக்கடே, கிக், ரேஸ் குர்ரம் உள்ளிட்ட வெற்றிப் படங்களின் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி. மேலும், ராம்சரண் நடித்த த்ருவா (தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்) படத்தையும் இவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in