அக்.6-ல் கோவாவில் நாக சைதன்யா - சமந்தா திருமணம்

அக்.6-ல் கோவாவில் நாக சைதன்யா - சமந்தா திருமணம்
Updated on
1 min read

அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நாக சைதன்யா மற்றும் சமந்தா திருமண நடைபெறவுள்ளது. இதற்கு திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

இரு வீட்டார் சம்மதத்துடன் ஜனவரி 29-ம் தேதி நாக சைதன்யா - சமந்தா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

இருவரின் திருமணம் இந்தாண்டிற்குள் நடைபெறும் என்று தகவல் மட்டுமே வெளியானது. எப்போது திருமணம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், நாக சைதன்யா - சமந்தா இருவரின் திருமணம் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது. இதில் இருவரின் குடும்பத்தினர் சுமார் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளார்கள்.

அக்டோபர் 6-ம் தேதி திருமணத்தை முடித்துவிட்டு, மீண்டும் அக்டோபர் 10-ம் தேதி முதல் சிவகார்த்திகேயன் - பொன்ராம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சமந்தா திட்டமிட்டுள்ளார். தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்களின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு தேன்நிலவு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள் நாகசைதன்யா - சமந்தா ஜோடி.

தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் படம், 'மெர்சல்', பொன்ராம் - சிவகார்த்திகேயன் இணையும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in