

நடிகை சாய்பல்லவியின் முதல் தெலுங்குப் படமான 'ஃபிடா'வுக்கு கிடைத்த வரவேற்பில் அவர் நெகிழ்ந்துள்ளார்.
தெலுங்கானா பின்னணியில் சொல்லப்பட்டுள்ள காதல் கதையான 'ஃபிடா' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பானுமதி என்கிற தெலங்கானா பெண்ணாக சாய்பல்லவி நடித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் , "ரசிகர்களின் வரவேற்பு ஆச்சரியமாக உள்ளது. அதுவும் தெலங்கானா நடையில் என் வசனங்கள் அவர்களை ஈர்த்துள்ளன. அந்த மொழியைக் கற்றதால், தற்போது தெலுங்கு என்று நினைத்தாலே அந்த நடைதான் எனக்கு வருகிறது " என்று கூறியுள்ளார்.
தில் ராஜு தயாரிக்க, வருண் தேஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சேகர் காமுல்லா இயக்கியுள்ளார். முதல் மூன்று நாட்களில் மட்டும் படம் 25 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.