

தயான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின்பாலி - நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ள படத்துக்கு 'லவ் ஆக்ஷன் டிராமா' என பெயரிட்டுள்ளார்கள்.
தமிழில் 'ரிச்சி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாவுள்ளார் நிவின் பாலி. அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
மலையாளத்தில் தயான் ஸ்ரீனிவாசன் இயக்குநராக அறிமுகமாவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நிவின் பாலி. இவர் மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருக்கும் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பி ஆவார்.
'லவ் ஆக்ஷன் டிராமா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இதில் நயன்தாரா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். அஜுவர்கீஸ் மற்றும் விஷாக் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள். தினேஷன் என்ற கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், ஷோபா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடிக்கவுள்ளார்கள்.
செப்டம்பர் மாதம் துவங்கவுள்ள இப்படம், அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
</p>