

பாவனாவுக்கு நாங்கள் துணை நின்றிருக்கிறோம், இனியும் தோள் கொடுப்போம் என்று மம்மூட்டி தெரிவித்துள்ளார்.
கொச்சியில் உள்ள நடிகர் மம்மூட்டி இல்லத்தில், ஜூலை 11-ம் தேதி நடந்த கேரள நடிகர் சங்க அமைப்பான அம்மா சங்க ஆலோசனை கூட்டத்தில் பாவனா கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கப்பட்டிருப்பது குறித்து மம்மூட்டி, "பாதிக்கப்பட்டவர் நம்மில் ஒருவர். அவருக்கு நாங்கள் துணை நின்றிருக்கிறோம் இனியும் தோள் கொடுப்போம்.
இது எங்கள் ஒவ்வொருவரது தனிப்பட்ட முடிவும் சங்கத்தின் சார்பாக எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த முடிவும் ஆகும். எனவேதான் சங்கத்திலிருந்து நடிகர் திலீப்பை அகற்றினோம். எங்களில் சிலர் இதற்கு முன்னதாக இவ்விவகாரத்தில் மவுனம் காத்ததற்கு எங்களுக்கு வழக்கைப் பற்றி தெளிவாகத் தெரியாததே காரணம்.
தற்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார் மம்மூட்டி