

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் திலீப்பின் 2 நாள் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கமல்லி நீதி மன்றத்தில் நேற்று அவர் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி ஆதாரங் களைச் சேகரிக்க வேண்டி இருப்ப தால், மேலும் ஒரு நாள் அனுமதிக் கக் கேட்டு போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து மேலும் ஒரு நாள் திலீப்பிடம் விசாரிக்க போலீஸுக்கு அனுமதியளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அலுவா போலீஸ் கிளப்புக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை முடிந்து இன்று மாலை 5 மணிக்கு திலீப் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இதுதொடர்பாக அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஏ.சுரேஷன் கூறுகையில், ‘எங்களிடம் போது மான ஆதாரங்களும், ஆவணங் களும் உள்ளன. வழக்கு விசா ரணையின் போது ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்’ என்றார்.
நடிகர் திலீப்பின் வழக்கறிஞர் கே.ராம்குமார் கூறும்போது, ‘திலீப்பின் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் சனிக்கிழமை பிற்பகலில் எடுத்துக்கொள்ளப் படும் என எதிர்பார்க்கிறோம். போலீஸாரிடம் வழக்கு தொடர்பாக போதுமான ஆதாரங்கள் உள்ள தாகக் கூறப்படும் நிலையில் ஏன் அப்ரூவரைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்’ என்றார்.
வழக்கு தொடர்பாக திலீப்பின் மேலாளர் அப்புண்ணி மற்றும் நடிகரும், இயக்குநருமான நாதிர்ஷாவிடம் ஏற்கெனவே போலீஸார் 13 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப் போலீஸார் திட்டமிட்டுள் ளனர். ஆனால் இருவரது செல் போனும் அணைக்கப்பட்டுள்ளது.
நடிகை பாவனா கடத்தல் வழக்கு தொடர்பாக திலீப்புக்கு எதிராக போலீஸார் 19 வகையான ஆதாரங்களைச் சேகரித்தனர். அதன் அடிப்படையில்தான் அவரை கடந்த 10-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.