அன்பு எனும் அடைமழையில் நனைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி: பிரபாஸ்

அன்பு எனும் அடைமழையில் நனைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி: பிரபாஸ்
Updated on
1 min read

அன்பு எனும் அடைமழையில் நனைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி என்று 'பாகுபலி 2' நாயகன் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை என்னை ரசிகர்களாகிய நீங்கள் அன்பு எனும் அடைமழையால் நனைய வைத்ததற்கு எந்நாளும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இந்தியா, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் இருந்தும் என்னை உங்களின் அளவற்ற அன்பினால் திக்குமுக்காட செய்ததற்கு நன்றி கடனாக என்னுடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தி உங்களை மகிழ்விக்க முயற்சி செய்துள்ளேன். அதில் வெற்றியும் கண்டுள்ளதாக அனைவரும் கூறுகின்றனர்.

என்னுடைய 'பாகுபலி' பயணத்தில் நான் கைப்பற்றிய அம்சங்களில் முக்கியமானவர்கள் நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

'பாகுபலி' போன்ற பிரம்மாண்ட படைப்பில் என்னைக் கதாநாயகனாக்கி வாழ்நாள் முழுவதும் நொடிக்கு நொடி நினைத்துப் பெருமைப்படும் வாய்ப்பை அளித்த இயக்குனர் ராஜமௌலிக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.

இத்தருணத்தில் 'பாகுபலி' படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள் மற்றும் பாராட்டுகள்'' என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in