ஃபகத் பாசிலுடன் இணையும் அமலா பால்!

ஃபகத் பாசிலுடன் இணையும் அமலா பால்!
Updated on
1 min read

மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்பும் நடிகை அமலா பால், மாலிவுட்டின் மயக்கும் நடிகராக வலம்வரும் ஃபகத் பாசிலுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.

விதவிதமான கேரக்டர்கள், இயல்பான கதையின் நாயகர் தோற்றங்கள் என முன்னணி நடிகராக உருவெடுத்துள்ள ஃபகத் பாசிலுடன் இணைவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் நடிகை அமலா பால்.

பிரபல இயக்குநர் சத்தியன் அந்திக்காடு இயக்கவுள்ள இந்தப் படத்தின் பெயர், ‘ஒரு இந்தியன் பிரணய கதா’.

காதலும் நகைச்சுவையும் கலந்த மென்மையான கதைக்களத்தைக் கொண்டதாக இருக்குமாம் இப்படம். வித்யாசாகர் இசையமைக்கும் இந்தப் படத்தின் படிப்பிடப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in