அனுஷ்காவின் புது முடிவு!

அனுஷ்காவின் புது முடிவு!
Updated on
1 min read

அடுத்தாண்டு ஏப்ரல் வரை எந்த படத்தையும் ஒப்புக் கொள்வதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார் அனுஷ்கா.

'ருத்ரமாதேவி', 'பாஹுபாலி' என இரண்டு மெகா பட்ஜெட் படங்களில் நடித்துவருகிறார் அனுஷ்கா. இப்படங்களைத் தவிர எந்த ஒரு படத்தையும் அனுஷ்கா ஒப்புக் கொள்ளவில்லை.

இவ்விரண்டு படங்களுமே தனது திரையுலக வாழ்வில் மிக முக்கியமான படங்களாக கருதுகிறாராம் அனுஷ்கா. ஆகையால் எந்த ஒரு புதுப்பட வாய்ப்பு வந்தாலும் அதனை தவிர்த்து விடுகிறாராம்.

இரண்டு படங்களிலுமே இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இல்லாதளவிற்கு கடுமையான உடலுழைப்பை கொட்டியிருக்கிறார் அனுஷ்கா. 'பாஹூபாலி' படத்திற்காக குதிரை ஓட்டுவது, வாள் சண்டை என தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து வருகிறார்.

'பாஹுபாலி' படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு ஏப்ரல் வரை தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி.

அனுஷ்கா நடிப்பில் 2013ல் அலெக்ஸ்பாண்டியன், மிர்ச்சி, சிங்கம் 2 ஆகிய படங்கள் வெளியாகியிருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் அனுஷ்கா நடித்திருக்கும் 'இரண்டாம் உலகம்' விரைவில் வெளிவரவிருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in