உறுதுணை நடிகரான ஸ்ரீஹரி மரணம்!

உறுதுணை நடிகரான ஸ்ரீஹரி மரணம்!
Updated on
1 min read

தெலுங்கு திரையுலகின் முன்னணி உறுதுணையான நடிகரான ஸ்ரீஹரி இன்று மும்பையில் காலமானார்.

தெலுங்கில் 'மஹதீரா', 'பிருந்தாவனம்', 'டான் சீனு' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் உறுதுணை நடிகராக நடித்தவர் ஸ்ரீஹரி. தமிழில் விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர்.

'மஹதீரா' படத்தில் ஷேர் கான் என்னும் வேடத்தில் நடித்தார். அப்படத்திற்கு பிறகு 'ஷேர் கான் ஸ்ரீஹரி' என்று அழைக்கப்பட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான 'THOOFAN' படத்திலும் இதே பெயரிலேயே நடித்திருந்தார்.

'Rambo Rajkumar' என்ற இந்தி படத்திற்காக மும்பைக்கு சென்றிருந்தார் ஸ்ரீஹரி. அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று மரணமடைந்தார்.

அவருக்கு வயது 49. நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர் தான் ஸ்ரீஹரி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in