அப்பா தான் பையன்!

அப்பா தான் பையன்!
Updated on
1 min read

நாகேஸ்வர ராவ், நாகார்ஜுன், நாக சைந்தன்யா நடிக்கும் 'மனம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (செப்.20) வெளியாகியுள்ளது.

நாகேஸ்வர ராவ், நாகார்ஜுன், நாக சைந்தன்யா என ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் நடித்து வரும் படம் 'மனம்'. இப்படத்தை 'யாவரும் நலம்' இயக்குநர் விக்ரம் குமார் இயக்கி வருகிறார். அக்கினேனி ஸ்டூடியோஸ் மூலம் நாகார்ஜுனே தயாரிக்கிறார். சமந்தா, ஸ்ரேயா இருவரும் நாயகிகளாக நடித்து வருகிறார்கள்.

புகழ்பெற்ற 'BACK TO THE FUTURE' படத்தின் தழுவலே 'மனம்' என்று பேச்சு நிலவுகிறது. 'மனம்' படத்தில் நாக சைந்தன்யாவின் மகனாக நாகார்ஜுனும், நாகார்ஜுன் மகனாக நாகேஸ்வர ராவும் நடித்து வருகிறார்களாம்.

தனது தந்தைக்கு காலத்தில் பின்னோக்கி சென்று மகன் எவ்வாறு உதவுகிறான் என்பது தான் கதையின் கரு. இதே கருவை மையமாகக் கொண்டே 'டோரேமான்' என்னும் கார்ட்டூனும் வெளியாகி வருகிறது.

இப்படத்தில் மூன்று தலைமுறை நடிகர்களுமே எப்படி நடித்திருக்கிறார்கள் என்ற ஆவல் தெலுங்கு திரையுலகை ஆட்கொண்டு உள்ளது. இன்று (செப். 20) நாகேஸ்வர ராவ் பிறந்த நாள் என்பதால் 'மனம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in