

ராஜமெளலி இயக்கிவரும் 'பாஹுபாலி' படத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
'Attarintiki Daaredhi' படம் இணையத்தில் வெளியானதால், தற்போது தெலுங்கு திரையுலகில் பல பிரம்மாண்ட தயாரிப்புகளுக்கு பலத்த பாதுகாப்பு போட்டிருக்கிறார்கள்.
ராஜமெளலி இயக்கிவரும் பிரம்மாண்ட தயாரிப்பான 'பாஹுபாலி' படத்திற்கு இதுவரை தெலுங்கு திரையுலகில் இல்லாதளவிற்கு கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
அப்படத்தில் பணியாற்றும் அனைவரையும் அழைத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருப்பது மட்டுமன்றி, எடிட்டிங் நடைபெறும் கம்ப்யூட்டர்களுக்கு பிரத்யேக பாஸ்வேர்ட்களை உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் எடிட்டிங் நடைபெறும் இடத்திற்கு பலத்த பாதுகாப்பு போட்டியிருக்கிறார்களாம்.
'பாஹுபாலி' படம் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் பொருட்செலவில் உருவாக்கி வருவதால், இணையத்தில் வெளியானால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த முடிவினை எடுத்திருக்கிறார்கள்.
'பாஹுபாலி' படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் வெளிவரவிருக்கிறது.