ஹுத்ஹுத் புயலுக்கு சமந்தா ரூ.10 லட்சம் நிதியுதவி

ஹுத்ஹுத் புயலுக்கு சமந்தா ரூ.10 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஹுத்ஹுத் புயல் தாக்கியது. இதில் கடலோர ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. விசாகப்பட்டினம் பெருமளவில் சேதமடைந்தது. இதில் 50 பேர் பலியானார்கள், பல கோடி மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்தன.

ஹுத்ஹுத் புயலுக்காக நடிகர் சூர்யா, கார்த்திக், விஷால் உட்பட பல திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழிலதிபர்கள் நிதியுதவி வழங்கினர். இதற்கு நடிகை சமந்தாவும் ரூ. 10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சமந்தா நேற்று காலை ஹைதராபாத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in