

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பற்றி படமல்ல 'க்ரேஸிவாலா' என்று இயக்குநர் மோகன பிரசாத் கூறியுள்ளார்.
சமீபத்தில் தெலுங்கு திரையுலகில், 'க்ரேஸிவாலா' படத்தின் போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் போன்று எம்.எஸ்.நாராயணா வேடமிட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
ஆனால், அரவிந்த் கேஜ்ரிவாலை பற்றிய படமல்ல என்றும், மக்களை ஓட்டு அளிக்க தூண்டுவது தான் படத்தின் கதை என்றும் இயக்குநர் மோகன பிரசாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் சொல்லும்போது, "படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் நாராயணாவின் லுக் அரவிந்த் கேஜ்ரிவால் போலயே வடிவமைக்கப்பட்டது. அதற்காக நாங்கள் ஆம் ஆத்மி கட்சி தலைவரை பற்றி படம் எடுக்கவில்லை. மக்களுக்கு ஓட்டு அளிப்பதன் அவசியத்தையும், நல்ல தலைவரை தேர்ந்தெடுத்து, தம் தலைவிதியை மாற்றியமைத்துக் கொள்ளவும் இப்படம் வலியுறுத்துகிறது” என்று கூறியுள்ளார்.