

தெலுங்கில் உருவாகவுள்ள 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார் ஜுனியர் என்.டி.ஆர்.
சர்வேதேச நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சிதான் பிக் பாஸ். தற்போது விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தமிழில் அந்நிகழ்ச்சியைப் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இம்மாத இறுதியில் ஒளிபரப்பைத் தொடங்க விஜய் தொலைக்காட்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தெலுங்கில் இதே நிகழ்ச்சி உருவாகவுள்ளது. இதனை முன்னணி நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்காக பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் நூறு நாட்கள் இணைந்து வசிக்கப் போகின்றனர். அதுவும் வெளியுலக தொடர்பில்லாமல் நூறு நாட்கள் தொடர்ந்து வசிக்கப் போகின்றனர் அதுதான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம். அவர்களுக்கு மொபைல் போன், லாண்ட் லைன் போன்ற எந்த தொலைத்தொடர்பும் வழங்கப்பட மாட்டாது. அந்த வீட்டில் கடிகாரம், நாளிதழ்கள், பேப்பர் பேனா போன்ற எந்த உபகரணங்களும் இருக்காது. இப்படியாக அவர்கள் நூறு நாட்கள் அந்த வீட்டில் வசிக்கவேண்டும்.