மணிரத்னம் படத்தில் இருந்து விலகியது ஏன்? - ராம் சரண் விளக்கம்

மணிரத்னம் படத்தில் இருந்து விலகியது ஏன்? - ராம் சரண் விளக்கம்
Updated on
1 min read

மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் தனக்கு பதில் துல்கர் சல்மான் நடிக்கவிருப்பதாக நடிகர் ராம் சரண் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சீரஞ்சிவியின் மகன் ராம் சரண். கிருஷ்ணவம்சியின் இயக்கத்தில் 'Govindudu Andarivadele' என்ற படத்தில் பிரகாஷ்ராஜ் உடன் நடித்திருக்கிறார் ராம் சரண். இத்திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே இன்று (அக்டோபர் 1) வெளியாகி இருக்கிறது.

இப்படத்திற்காக அளித்துள்ள பேட்டியில், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்காதது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் ராம் சரண். "நானும், மணிரத்னமும் ஒரு படம் தொடர்பாக பேசினோம். அதற்கு பிறகு இருவருக்குமே இந்த படம் சரியாக அமையாது என்று பிரிந்து விட்டோம். தற்போது மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் அப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஆவலாக இருக்கிறேன். யார் தான் அவருடன் பணியாற்ற விரும்பமாட்டார்கள்.?" என்று கூறியிருக்கிறார் ராம் சரண்.

மேலும், "மணிரத்னம் - துல்கர் சல்மான் இணைந்திருக்கும் படம் வெளிவந்தால் ஏன் நான் அப்படத்தில் இருந்து விலகினேன் என்று தெரியவரும். தயாரிப்பாளருக்கு நஷ்டத்தினையும், எனக்கு விருதும் கிடைக்க நான் விரும்பவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்யும் வகையில் அமையவேண்டும். அது மாதிரியான கதையில் விரைவில் இணைவோம்" என்று தெரிவித்துள்ளார் ராம் சரண்.

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் நாயகன் யார் என்று தமிழ் திரையுலகில் நிலவி வரும் கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கும் பி.சி.ஸ்ரீராம், படப்பிடிப்பு அக்டோபர் 6ம் தேதி முதல் தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in