கட்டுப்படி ஆகாத அனுஷ்கா ஷர்மா!
தெலுங்கு படங்களில் நடிக்க அனுஷ்கா ஷர்மா சொல்லும் சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியுற்று இருக்கிறார்கள்.
'பாண்ட் பாஜா பரத்' படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா. அதனைத் தொடர்ந்து ஷாருக்கானுடன் நடித்த 'ரப்னே பனா தே ஜோடி' படம் பெரிய ஹிட்டடிக்கவே முன்னணி நடிகையாக வலம்வர ஆரம்பித்தார்.
தென்னிந்திய நடிகர்களுக்கு, இந்தி திரையுலக நாயகிகளுடன் நடிக்க வேண்டும் என்று ஒரு ஆசையுண்டு. இதனால், தயாரிப்பாளர்கள் அனுஷ்கா ஷர்மாவைத் தங்களது படத்திற்கு நாயகியாக நடிக்க கேட்க, அவர் சொல்லும் சம்பளத்தினை கேட்டவுடன் அப்படியே திரும்பிவிடுகிறார்கள்.
ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபுவின் 'ஆகடு', ஜுனியர் என்.டி.ஆர் படம் என தொடர்ச்சியாக அனுஷ்கா ஷர்மாவை நடிக்கவைக்க கேட்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரிடமும் அனுஷ்கா கேட்ட சம்பளத்தைப் பார்த்து வேண்டாம்டா சாமி என்று திரும்பிவிட்டார்கள்.
தெலுங்கில் முன்னணி நடிகைகளான சமந்தா, காஜல், ('அருந்ததி' நாயகி)அனுஷ்கா போன்றோர்களது சம்பளத்தினை விட மூன்று மடங்கு அதிகமாக கேட்கிறாராம். எப்படி கொடுக்க முடியும் எனப் புலம்புகிறார்கள்.
அப்படியென்றால் இந்த மூன்று பேருடைய சம்பளம் எவ்வளவு என்று கேட்டால், அது சஸ்பென்ஸ் என்கிறார்கள்.
