சர்வதேச திரைப்பட விழாவில் மலையாள சினிமா ஆதிக்கம்!

சர்வதேச திரைப்பட விழாவில் மலையாள சினிமா ஆதிக்கம்!
Updated on
1 min read

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 6 மலையாள படங்கள் தேர்வாகி இருக்கின்றன.

நவம்பர் மாதம் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா துவங்கவிருக்கிறது. இவ்விழாவை துவக்கிவைக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவிருப்பதால் விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று நிராகரித்துவிட்டார்.

இவ்விழாவில் இந்திய படங்கள் திரையிடும் பிரிவில் முதல் முறையாக 6 மலையாளப் படங்கள் தேர்வாகி இருக்கின்றன. இது மலையாள திரையுலகினர் மத்தியில், பெரும் சந்தோஷத்தினை அளித்திருக்கிறது.

Artist, 101 Chodyangal, Celluloid, Kanyaka Talkies, Kunjananthante Kada மற்றும் Shutter ஆகிய 6 படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன. இதில் Kanyaka Talkies என்கிற திரைப்படம் இந்திய திரைப்படங்கள் திரையிடும் பிரிவில் முதலில் திரையிடப்படும்.

மலையாளத்தில் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்டு வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கும் வேளையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மலையாள திரையுலகிற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in