

ராஜமெளலி இயக்கிவரும் 'பாகுபாலி' படத்தில் இரண்டாவது நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'பாகுபாலி'. தெலுங்கில் 'பாகுபாலி', தமிழில் 'மகாபலி' என்ற பெயரில் என இரண்டு மொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது. ராஜமெளலி இயக்கி வருகிறார்.
ஏற்கனவே படத்தின் நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். அனுஷ்காவின் பிறந்த நாளன்று, 'பாகுபாலி' படத்தில் அனுஷ்கா எப்படி இருப்பார் என்ற வீடியோ பதிவு ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், படத்தின் இரண்டாம் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். விரைவில் தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்க இருக்கிறார்கள். இப்படம் தனக்கு தென்னிந்தியாவில் நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் சந்தொஷத்தில் இருக்கிறாராம் தமன்னா.