பாலிவுட் வேண்டாம் : பவன்

பாலிவுட் வேண்டாம் : பவன்
Updated on
1 min read

'Attarintiki Daredi' படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து இந்தி திரையுலக இயக்குநர்கள் பலரும் பவன் கல்யாணிடம் தங்களுக்கு கால்ஷீட் தரும்படி கேட்டு வருகிறார்கள்.

த்ரிவிக்ரம் இயக்கத்தில், பவன் கல்யாண் நடித்த 'Attarintiki Daredi' படம் உலகளவில் இந்தி திரைப்படங்களுக்கு நிகராக வசூலை வாரிக்குவித்தது. இணையத்தில் வெளியாகிவிட்டதே என்று கவலைப்பட்டு கொண்டிருந்த தயாரிப்பாளருக்கு படத்தின் வசூல், பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்தது போல் ஆகிவிட்டது.

இதனால் இந்தி திரையுலகினர் வாய்பிளந்து நிற்கின்றனர். இவ்வளவு ரசிகர்களா என்ற ஆச்சர்யத்துடன், அப்படியே பவன் கல்யாணுக்கு போன் அடிக்கிறார்கள்.

இந்தி - தெலுங்கு என இரு மொழிகளில் படம் எடுக்கிறோம். கதை கேட்டுவிட்டு கால்ஷீட் தாருங்கள் என நச்சரித்து வருகிறார்கள். ஆனால், இதற்கு பவன் கல்யாண் கொஞ்சமும் செவிசாய்க்கவில்லை. ஏனாம்?

ராம் சரண், பிரியங்கா சோப்ரா நடிப்பில் இந்தி - தெலுங்கு என இருமொழிகளில் வெளியான 'ZANJEER' படத்தின் தோல்வி தான் பவன்கல்யாணை யோசிக்க வைத்துள்ளதாம். இதனால் இப்போதைக்கு இந்தி படங்கள் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.

'Attarintiki Daredi'யைத் தொடர்ந்து 'கபார் சிங் 2' படத்தில் நடிக்கவிருக்கும் பவன் கல்யாண், அதனைத் தொடர்ந்து ' Seethamma Vakitlo Sirimalle Chettu' பட இயக்குநர் ஸ்ரீகாந்த் அடலா இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். PVP சினிமாஸ் இப்படத்தினைத் தயாரிக்கவிருக்கிறது.

இதனிடையே பவன் கல்யாண் நடித்த பழைய படங்களை தூசிதட்டி எடுத்து, இந்தி டப்பிங் செய்து வெளியிட ஒரு சிலர் முயன்று வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in