

மோகன்லால் நடிக்கவுள்ள புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் பிரபல சண்டைக்காட்சிகள் வடிவமைப்பாளரான பீட்டர் ஹெய்ன்.
'ரன்', 'காக்க காக்க', 'அந்நியன்', 'சிவாஜி', 'மகாதீரா', 'எந்திரன்', '7ம் அறிவு', 'பாகுபலி' மற்றும் 'புலிமுருகன்' உள்ளிட்ட பல படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்து புகழ் பெற்றவர் பீட்டர் ஹெய்ன்.
சமீபத்தில் மோகன்லால் நடித்த 'புலிமுருகன்' படத்தில் இவர் வடிவமைத்த சண்டைக்காட்சிகளுக்காக தேசிய விருது வென்றார். சண்டைக்காட்சிகள் வடிவமைப்பை முதன் முதலாக தேசிய விருது பட்டியலில் சேர்த்தவுடன் பீட்டர் ஹெய்னுக்கு அவ்விருது வழங்கப்பட்டு குறிப்பிடத்தக்கது.
தற்போது மோகன்லாலை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளார் பீட்டர் ஹெய்ன். இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி முடிவுற்றுள்ளது. தான் உருவாக்கியுள்ள கதைக்கு, திரைக்கதையை முடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் பீட்டர் ஹெய்ன்.
பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் பல்வேறு மொழிகளில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணிபுரியவுள்ளார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.