

தெலுங்கு படத்தில் நடிக்க என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று நடிகை தீபிகா படுகோன் கூறியுள்ளார்.
ரன்வீர் சிங் உடன் நடித்துள்ள 'ராம் லீலா' படத்தினை விளம்பரப்படுத்த ஹைதராபாத் வந்தார் நடிகை தீபிகா படுகோன்.
இந்தி திரையுலகின் நம்பர் ஒன் நடிகை என்பதால், தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க தொடர்பு கொண்டதாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
ஹைதராபாத் வந்திருந்த தீபிகா படுகோனிடம் இது குறித்து கேள்வி எழுப்ப பட்டது. அதற்கு “தெலுங்கு படத்தில் நடிக்க என்னிடம் கேட்டால், நான் ஏன் நடிக்க மாட்டேன் என்று கூற போகிறேன்? என்னை இதுவரை யாரும் படத்தில் நடிப்பது குறித்து தொடர்பு கொள்ளவில்லை” என்று கூறினார்.
தீபிகா படுகோனுக்கு தெலுங்கு திரையுலகின் நம்பர் ஒன் நடிகையான சமந்தா தீவிர ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. தீபிகா தெலுங்கு திரையுலகுக்கு போனால், அது சமந்தாவுக்கு சவாலாக அமையும்.