

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' தெலுங்கில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.
இந்தாண்டில் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் சம்பாதித்த படங்களில் முதல் இடத்தில் இருக்கிறது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.
7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி, விளம்பரத்திற்கு 3 கோடிகள் வரை செலவு செய்து இப்படம் வெளியாகியது. முதல் 3 வாரத்தில் சுமார் 30 கோடி ரூபாய் வசூல் செய்தது.
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான இப்படம், சூர்யாவின் 'சிங்கம் 2' வசூலை பட இடங்களில் முறியடித்தது. இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு போட்டி நிலவியது.
இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சுரேஷ் வாங்கியிருக்கிறார். “'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறேன். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும். தமிழக மக்களிடையே படம் வரவேற்பு பெற்றிருப்பதைப் போல, தெலுங்கில் இப்படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் இதுவரை தமிழ் படங்களை வாங்கி டப்பிங் செய்து வெளியிட்டு வந்த கொண்டெட்டி (Kondeti) என்பவர் முதன் முறையாக இப்படத்தினைத் தயாரிக்கிறார். கன்னடத்திலும் விரைவில் இப்படம் ரீமேக்காக இருக்கிறது.