நாம் விழித்துக்கொள்ள இதுவே உரிய நேரம்: பாவனா விவகாரத்தில் ஷிவதா கருத்து

நாம் விழித்துக்கொள்ள இதுவே உரிய நேரம்: பாவனா விவகாரத்தில் ஷிவதா கருத்து
Updated on
1 min read

நாம் விழித்துக்கொள்ள இதுதானே உரிய நேரம் என்று பாவனா விவகாரம் தொடர்பாக ஷிவதா தெரிவித்துள்ளார்.

நடிகர் பாவனாவின் காருக்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஷிவதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "இன்னொரு சம்பவம், இந்தியாவில் பெண்கள் வீட்டில் கூட பாதுகாப்பாக இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது. ஒரு பெண்ணாக, மனிதியாக, இந்த சம்பவம் என்னை உலுக்கியுள்ளது. நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். சில ஆண்களின் செயல் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலைகுனியச் செய்துள்ளது. நாம் விழித்துக்கொள்ள இதுதானே உரிய நேரம், தேவையான நடவடிக்கைகள் எடுக்க இதுதானே சரியான சந்தர்ப்பம்? விழித்தெழுங்கள்.

பெண்களாகிய நம்மை ஏளனம் செய்வதோ, ஒதுக்குவதோ, துன்புறுத்துவதோ, பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதோ கூடாது. பெண்களாகிய நாம் தனிமைப்படுத்தப்பட்டதாக உணரக் கூடாது. பெண்களாகிய நாம் எங்கு சென்றாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணின் வலிமைக்கும், தைரியத்துக்கும் தலைவணங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in