

'கஹானி' தமிழ் ரீமேக்கிற்கு 'நீ எங்கே என் அன்பே' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
வித்யா பாலன் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தி படம் 'கஹானி'. கர்ப்பிணிப் பெண் வேடத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று, திரையரங்கிலும் வசூலை வாரிக் குவித்தது.
இப்படத்தின் ரீமேக்கை தற்போது 'வயா காம் மோஷன் 18 பிக்சர்ஸ்' நிறுவனம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்துள்ளது. பிரபல தெலுங்குப் பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.
தெலுங்கில் ‘அனாமிகா’ என்று பெயரிட்டனர். தமிழில் தலைப்பு வைக்காமல் இருந்தனர். இப்போது, படத்தின் கதைக்கு பொருத்தமாக ‘நீ எங்கே என் அன்பே’ என பெயரிட்டு இருக்கிறார்கள்.
தென்னந்தியாவிற்கு ஏற்றவாறு கதையில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறார்கள். இப்படத்தில் வித்யா பாலன் போன்று கர்ப்பிணி வேடத்தில் நயன்தாரா நடிக்கவில்லை. காதலர் தினத்தன்று இப்படத்தின் டிரெய்லரை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.