விஜய் தேவரகொண்டா படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் தேவரகொண்டா படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ்

Published on

விஜய் தேவரகொண்டா நடித்துவரும் ‘நோட்டா’ படத்தில், ஏ.ஆர்.முருகதாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கீதா கோவிந்தம்’ தெலுங்குப் படங்களின் மூலம் புகழ் பெற்றவர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமாகும் படம் ‘நோட்டா’. ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் இவர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ‘நோட்டா’ படத்தில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக மெஹ்ரீன் நடிக்கிறார். நாசர், சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

‘நோட்டா’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீஸானது. இந்நிலையில், இந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அவரை இயக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆனந்த் சங்கர், ‘என்னவொரு மகிழ்ச்சிகரமான தருணம். நடிகராக என் இயக்குநரை இன்று இயக்கினேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம், அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆனந்த் சங்கர் இயக்கிவரும் ‘நோட்டா’ படமும் அரசியல் சம்பந்தப்பட்டக் கதைதான். குரு - சிஷ்யன் இருவருமே ஒரே கதைக்களத்தை ஒரே நேரத்தில் தொட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in