சீன நடிகருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்

சீன நடிகருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்
Updated on
1 min read

சீன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரியதர்ஷனின் கனவுப்படம் ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். பிரிட்டிஷ்காரர்களைத் தீவிரமாக எதிர்த்தவர் இவர்.

குஞ்சலி மரக்கார் வேடத்தில், மோகன்லால் நடிக்கிறார். அவருடைய இளம் வயது கதாபாத்திரத்தில், மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். ‘சிறைச்சாலை’ படத்துக்குப் பிறகு 22 வருடங்கள் கழித்து மோகன்லால் - பிரபு இருவரும் இந்தப் படத்தின் மூலம் இணைந்து நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் தன்னை அறிமுகப்படுத்தியவர் பிரியதர்ஷன் என்பதால், அவர் கேட்டதும் மறுக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படத்தில் அவர் சீன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

மலையாள சினிமாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் தயாராக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in