என்.டி.ஆர் வாழ்க்கை படங்களின் தோல்வி எனக்கு வருத்தமே: இயக்குநர் க்ரிஷ்

என்.டி.ஆர் வாழ்க்கை படங்களின் தோல்வி எனக்கு வருத்தமே: இயக்குநர் க்ரிஷ்
Updated on
1 min read

என்.டி.ஆர் வாழ்க்கை படங்களின் தோல்வி எனக்கு வருத்தமே என்று அதன் இயக்குநர் க்ரிஷ் தெரிவித்துள்ளார்

மறைந்த ஆந்திர முதல்வரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் பயோபிக் (உண்மைக்கதை) சமீபத்தில் ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி, உலகமெங்கும் வெளியானது. என்.டி.ஆர் வேடத்தில் நடித்த அவரது மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா நடித்துள்ளார். க்ரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் வித்யா பாலன், ராணா, சுமந்த், கல்யாண் ராம், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'என்.டி.ஆர் கதாநாயக்குடு' மற்றும் 'என்.டி.ஆர் மஹாநாயக்குடு' என்று இரண்டு பாகங்களாக வெளியானது. பெரும் பொருட்செலவில் வெளியான இப்படங்கள் படுதோல்வியைத் தழுவியது. இதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் க்ரிஷ்.

இந்தத் தோல்வி தொடர்பாகவும் தனது அடுத்த படம் தொடர்பாகவும் இயக்குநர் க்ரிஷ், “வெற்றி தோல்விகள் சினிமாவில் சகஜம். அதை நல்ல முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். என்.டி.ஆர் வாழ்க்கை பற்றிய இரண்டு படங்களின் தோல்வி எனக்கு வருத்தமே.

 ஆனால் அதனால் மட்டுமே நான் இனி வாழ்க்கை வரலாறுப் படங்கள் எடுக்க மாட்டேன் என்று அர்த்தமல்ல. எனது அடுத்த படம், 'காஞ்சே', 'கவுதமிபுத்ர சதகரணி' போல ஒரு வரலாற்றுப் படம். அல்லது கப்பார் இஸ் பேக் போல ஒரு கமர்சியல் படமாகவும் இருக்கலாம். இப்போது சில விஷயங்களை யோசித்து வருகிறேன். அவை மெதுவாக உருவெடுக்கும். இப்போதே அதைப் பற்றிப் பேசுவது தேவையற்றது” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in