

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா’ படம், தமிழில் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் வெளியாகிறது.
வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள தெலுங்குப் படம் ‘நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா’. அல்லு அர்ஜுன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க, முக்கிய வேடங்களில் சரத்குமார், அர்ஜுன், நதியா, தாகூர் அனூப்சிங், ஹரீஷ் உத்தமன், கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.
விஷால் - சேகர் இசையமைக்க, ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். அல்லு அர்ஜுன், ராணுவ வீரராக இந்தப் படத்தில் நடிக்கிறார். மற்ற மொழி நடிகர்களுக்கு, தமிழிலும் அவர்கள் படம் ஓட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அந்த வகையில், ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் தமிழிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.