‘96’ தெலுங்கு ரீமேக்கிலும் ஜானுவாக நடிக்கும் கெளரி கிஷண்

‘96’ தெலுங்கு ரீமேக்கிலும் ஜானுவாக நடிக்கும் கெளரி கிஷண்
Updated on
1 min read

தமிழில் ஜானுவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த கெளரி கிஷண், தெலுங்கிலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சி.பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘96’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக த்ரிஷா நடித்தார். விஜய் சேதுபதி - த்ரிஷா சின்ன வயது கதாபாத்திரத்தில் ஆதித்யா - கெளரி கிஷண் நடித்தனர்.

மேலும், ஜனகராஜ், தேவதர்ஷினி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.

பெரும்பாலானவர்களின் பள்ளிக்கால காதலை நினைவுபடுத்தும் வகையில் இருந்ததால், இந்தப் படத்தைக் கொண்டாடினர். 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் இந்தப் படம் ஓடியது. ‘ராம்’, ‘ஜானு’ என விஜய் சேதுபதி, த்ரிஷாவின் கதாபாத்திரப் பெயர்கள் பிரபலமடைந்தன.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இந்தப் படத்தை ரீமேக் செய்து வருகின்றனர். தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்க, சர்வானந்த் - சமந்தா இருவரும் நடிக்கின்றனர். அங்கும் கோவிந்த் வசந்தாவே இசையமைக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ‘லைஃப் ஆப் ராம்’ பாடலுக்கான காட்சிகளைக் கென்யாவில் படமாக்கியுள்ளனர். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

இந்நிலையில், தெலுங்கிலும் ஜானுவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் கெளரி கிஷணே நடிக்கிறார். இந்தத் தகவலை அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் இந்தப் படம் ‘99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கணேஷ் - பாவனா நடித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in