

மேக்கப் போடவில்லையா... மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? என்று தனது புகைப்படத்திற்கு பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பின் தொடர்பாளர் ஒருவருக்கு காட்டமான பதிலை தெரிவித்திருக்கிறார் மகேஷ் பாபுவின் மனைவியும், நடிகையுமான நம்ருதா.
சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிப் படமாக அமைந்துள்ள மகேஷ் பாபுவின் மகரிஷி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அவரது மனைவி நம்ருதா இன்ஸ்டாகிராமில் படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அந்த படத்தை குறிப்பிட்டு பின் தொடர்பாளர் ஒருவர், “ நர்மதா ஏன் நீங்கள் மேக்கப் போடவில்லை? நீங்கள் ஏதும் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மகேஷ் பாபுவின் மனைவி நம்ருதா, ”கவுரவ் உங்களுக்கு மேக்கப்புடன் இருக்கும் பெண்களைதான் பிடிக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் உங்கள் கருத்துக்கு பொருத்தமாக உள்ள யாரையாவது பின் தொடரலாம். இது எனது வேண்டுகோள் ” என்று காட்டமாக பதிலத்துள்ளார்.
நம்ருதா தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.