தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘கனா’: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்

தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘கனா’: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்
Updated on
1 min read

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’, தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

பாடலாசிரியர், பாடகர், நடிகர் என அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ், இயக்குநராக அறிமுகமான படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். அவருடைய அப்பாவாக சத்யராஜ் நடித்தார்.

‘எஸ்கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் சிவகார்த்திகேயன் முதன்முதலாகத் தயாரித்த படம் இது. திபு நிணன் தாமஸ் இசையமைத்தார். கடந்த வருடம் (2018) டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸான இந்தப் படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். ‘கனா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரமான ‘கெளசல்யா முருகேசன்’ என்பதைக் கொஞ்சம் மாற்றி ‘கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளனர்.

தெலுங்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷே ஹீரோயினாக நடிக்கிறார். பிமநேனி சீனிவாச ராவ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்க இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் மூன்றாவது தெலுங்குப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in