

ஜெய் நடிப்பில் தமிழில் ‘பார்ட்டி’, ‘நீயா 2’ ஆகிய படங்கள் வெளிவரத் தயாராக இருக்கும் சூழலில், ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார் அடுத்து இயக்கிவரும் புதிய படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜெய். இந்நிலையில் மம்மூட்டியுடன் இணைந்து ‘மதுர ராஜா’ என்ற மலையாளப் படத்திலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இது ஜெய் நடிக்கும் முதல் மலையாளப் படம். மம்மூட்டி, ஜெய் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்தில் அனுஸ்ரீ, மஹிமா நம்பியார், பூர்ணா ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.