

கேரளாவில் மலையாள நடிகர்களுக்கு இணையான வரவேற்பு விஜய்க்கு உள்ளது.
கேரளாவில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஏராளமான ரசிகர் மன்றங்கள் விஜய்க்கு உள்ளன. இந்த ரசிகர் மன்றங்கள் மூலம், விஜய் படம் வெளிவரும்போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், கட் அவுட்களில் புதுவிதமான அணுகுமுறைகளைச் செய்தல் ஆகியவற்றின் மூலம் விஜய் மீதான தங்கள் அன்பினை மலையாள ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அங்குள்ள விஜய் ரசிகர் மன்றங்களில் பிரபலமானது கொல்லம் நண்பன்ஸ். (kollam nanbans) .
இவர்கள் தீபாவளி அன்று ( நவம்பர் 6 ஆம் தேதி) திரைக்கு வரவுள்ள 'சர்கார்' படத்திற்கு இந்திய நடிகர்களிலேயே மிகப் பெரிய கட் அவுட்டை நடிகர் விஜய்க்காக உருவாக்கி உள்ளனர். (இந்த கட் அவுட்டின் உயரம் சுமார் 175 அடி என்று கூறப்படுகிறது)
இந்த கட் அவுட் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை திறக்கப்படுகிறது. இதனை மலையாள நடிகர் சன்னி வைன் திறந்து வைக்கிறார்.
மேலும், இந்தத் திறப்புவிழாவில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாகவும் கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.