13 வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் அனுஷ்கா

13 வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் அனுஷ்கா
Updated on
1 min read

13 வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகர் மாதவனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் அனுஷ்கா.

அனுஷ்கா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பாகமதி’. கடந்த ஜனவரி 26-ம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் ரிலீஸானது. ஜி.அசோக் இயக்கிய இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது. ஹாரர் படமான இதில், ஜெயராம், ஆதி, ஆஷா சரத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்தப் படத்துக்குப் பிறகு அனுஷ்கா வேறெந்த படத்திலும் நடிக்கவில்லை. காரணம், அவருடைய உடல் எடை. ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக ஏற்றிய எடை, குறையவே இல்லை. இத்தனைக்கும் அனுஷ்கா யோகா டீச்சர். யோகாவால் கூட அவர் எடையைக் குறைக்க முடியவில்லை.

எனவே, தீவிர உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் தற்போது எடையைக் குறைத்திருக்கிறார். அதனால், படங்களில் நடிக்கவும் முடிவெடுத்திருக்கிறார். நேற்று (நவம்பர் 7) அனுஷ்காவின் பிறந்த நாள். அதை முன்னிட்டு, அவருடைய புதுப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கோனா வெங்கட்.

அடுத்த ஆண்டு (2019) அமெரிக்காவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கோனா வெங்கட் இயக்கும் இந்தப் படத்தில் அனுஷ்கா ஜோடியாக மாதவன் நடிக்கிறார்.

அனுஷ்கா தமிழில் அறிமுகமான படம் ‘ரெண்டு’. இந்தப் படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தார் அனுஷ்கா. அதன்பிறகு 13 வருடங்கள் கழித்து மறுபடியும் மாதவனுடன் ஜோடி சேர இருக்கிறார் அனுஷ்கா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in