கேரளா வெள்ளத்துக்கு நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

கேரளா வெள்ளத்துக்கு நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை 300-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர்.  சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் காணொளி மூலம் கோரிக்கை வைத்தார். இதனால் இந்தியா மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளிலுமிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன.

இதற்கு சினிமா பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர். நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின் 10 லட்ச ரூபாயும், அருள்நிதி 5 லட்ச ரூபாயும் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கினார்கள். அதை தொடர்ந்து கமல்ஹாசன் 25 லட்ச ரூபாய், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 25 லட்ச ரூபாய், விஷால் 10 லட்ச ரூபாய், விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாய், தனுஷ் 15 லட்ச ரூபாய், சித்தார்த் 10 லட்ச ரூபாய், நயன்தாரா 10 லட்ச ரூபாய், நடிகர் விகரம் ரூ.35 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தெலுங்கு நடிகர்களான பிரபாஸ் ரூ.25 லட்சமும், ஜூனியர் என்.டி.ஆர்  ரூ.25 லட்சமும்  அளித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in