கேரள வெள்ளப் பாதிப்புக்கு நிவின் பாலி ரூ.25 லட்சம் நிதியுதவி

கேரள வெள்ளப் பாதிப்புக்கு நிவின் பாலி ரூ.25 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, நிவின் பாலி 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த பெருமழையால், கேரளா சின்னாபின்னமாகியுள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 8 லட்ச ரூபாயும், உயிர் இழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், சேதத்தில் இருந்து மீள நிதியுதவி அளிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலக நாடுகள் உள்படப் பல்வேறு இடங்களில் இருந்தும் கேரளாவுக்கு உதவிக்கரங்கள் நீள்கின்றன. சினிமாவில் இருந்தும் ஏராளமானோர் உதவி செய்து வருகின்றனர். மம்மூட்டி, துல்கர் சல்மான், ரோகிணி, கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ஸ்ரீபிரியா, அல்லு அர்ஜுன், நாகர்ஜுனா என தென்னிந்திய நடிகர்கள் பலரும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் நிவின் பாலி 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து இந்த உதவியை அவர் வழங்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in