

55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் அதிக விருதுகளை குவித்துள்ளது. ‘பிரம்மயுகம்’ படத்துக்காக மம்மூட்டிக்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சூரில் உள்ள ராமநிலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கேரள கலாச்சாரம் மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் சஜி செரியன் வெற்றியாளர்களை அறிவித்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான ஏழு பேர் கொண்ட நடுவர் குழு இந்த விழாவில் கலந்து கொண்டது.
சிறந்த நடிகர் விருதை வென்றதன் மூலம் 7 முறை கேரள அரசின் சிறந்த நடிகர் விருதை வென்ற ஒரே நடிகர் என்ற பெருமையை மம்மூட்டி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மோகன்லால், ஊர்வசி இருவரும் 6 முறை வென்றுள்ளனர்.
வெற்றியாளர்களின் முழு பட்டியல்: