

பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள புதிய படத்துக்கு நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘அகண்டா 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை முடித்துவிட்டு கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகவுள்ளது.
இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதால், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’ மற்றும் ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ ஆகிய படங்களில் பாலகிருஷ்ணா – நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சதீஷ் கிளரி தயாரிக்கவுள்ள இப்படமே பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் படங்களில் பெரும் பொருட்செலவு கொண்ட படம் என்று கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்புக்காக ராஜஸ்தானில் இடங்களைத் தேர்வு செய்து வருகிறார் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி.