‘வாரிசு’  இயக்குநர் படத்தில் சல்மான் கான்?

‘வாரிசு’  இயக்குநர் படத்தில் சல்மான் கான்?
Updated on
1 min read

கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா நடித்த ‘தோழா’, விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. இவர் அடுத்து ஆமிர் கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தது. இதற்காக அவர் அமீர்கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில் அவர், இந்திப் பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். 3 இடியட்ஸ், பிகே படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

இதனால் வம்சி இயக்கத்தில் அவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் அதே கதையை நடிகர் சல்மான் கானிடம் சொல்ல இருக்கிறார். இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்க இருக்கிறார். ‘வாரிசு படத்தை அடுத்து வம்சி இயக்கும் படத்தை மீண்டும் தயாரிக்க இருக்கிறார் தில் ராஜு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in