ஓடிடியில் அக்.10-ல் ‘மிராய்’ ரிலீஸ்!

ஓடிடியில் அக்.10-ல் ‘மிராய்’ ரிலீஸ்!
Updated on
1 min read

ஓடிடி தளத்தில் அக்டோபர் 10-ம் தேதி ‘மிராய்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கார்த்தி கட்டாமேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான படம் ‘மிராய்’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. செப்டம்பர் 12-ம் தேதி வெளியான இப்படம் அக்டோபர் 10-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து இப்படம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழுக்க பேன்டஸி படமாக உருவான இதில் மனோஜ் மஞ்சு வில்லனாக நடித்திருந்தார். ரித்திகா நாயக், ஜெகபதி பாபு, ஸ்ரேயா, ஜெயராம் உள்ளிட்ட பலர் தேஜா சஜ்ஜா உடன் நடித்திருந்தனர். பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வெளியிட்டது. கார்த்திக் கட்டாமேனி இப்படத்தின் இயக்குநர் மட்டுமன்றி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

‘ஹனுமன்’ படத்தைத் தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் ‘மிராய்’ படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அவருடைய அடுத்டுத்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Nine scriptures. Infinite power. One Superyodha to protect the Brahmand. #Mirai , India’s own superhero, is coming to your home, Streaming from October 10.#MiraiOnJioHotstar@tejasajja123 @HeroManoj1 @Karthik_gatta @RitikaNayak_ @vishwaprasadtg #KrithiPrasadpic.twitter.com/WIi5rq99m0

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in