நானி - சுஜித் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்!

நானி - சுஜித் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்!
Updated on
1 min read

சுஜித் இயக்கத்தில் நானி நடிக்கும் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓஜி’ படத்தின் இயக்குநர் சுஜித். இவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது நானி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதன் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு நானி - சுஜித் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

முன்னதாக, நானி படத்தின் பணிகளை பல மாதங்களாகவே செய்து வந்தார் சுஜித். இதன் பொருட்செலவு அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர் மாறியுள்ளார். தற்போது நிகாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘ப்ளடி ரோமியோ’ என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை.

இப்படத்தில் நானியுடன் நடிக்கவிருப்பவர்கள் உள்ளிட்ட விவரங்கள் எதையும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால், இப்படம் ஒரு டார்க் காமெடி பாணியில் இருக்கும் எனவும், மிகவும் சிரமப்பட்டு படமாக்கக் கூடிய கதை எனவும் பேட்டியொன்றில் சுஜித் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.

‘N’ever seen before energy…
‘S’oon to set the screens on fire #NaniXSujeeth Pooja Ceremony Completed on this Auspicious Day

Pump up for a Rampage ride on & off the screens

Natural Star @NameIsNani @SujeethSign @vboyanapalli @Niharikaent @unanimousprods pic.twitter.com/TswTPRmYXC

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in